Header Ads

வாட்ஸ்ஆப் : புதிய 'லைவ் லொகேஷன்" தொழில்நுட்பம் அறிமுகம்.!

 வாட்ஸ்ஆப் நிறுவனம் இப்போது புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது, மேலும் இந்த பயன்பாடுகள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது பயனர்களுக்கு பயன்படும் வகையில் 'லைவ் லொகேஷன்" என்ற புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது இந்த வாட்ஸ்ஆப் நிறுவனம்.




இந்த லைவ் லொகேஷன் தொழில்நுட்பம் பொறுத்தவரை பல இடங்களில் சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது, மேலும் இந்த லைவ் லொகேஷன் பயனங்களில் மிக அருமையாக உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


லைவ் லொகேஷன்:

வாட்ஸ்ஆப் செயலியில் இப்போது புதியதாக 'லைவ் லொகேஷன்" என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமானது. இந்த பயன்பாட்டின் மூலம்
தங்களின் இருப்பிடத்தை தங்களது உறவினர்கள் மற்றும் நன்பர்கள் நேரடியாக பகிர்ந்து கொள்ள முடியும்.


டெக்னொபோலிஸ்:

வாட்ஸ்ஆப் டெக்னொபோலிஸ் என்ற தொழில்நுட்ப அடிப்படையில் சமீபத்திய 2.17.375 பதிப்பானது பதிவிறக்கம் மற்றும் நிறுவும் போது குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது. தோராயமாக 6எம்பி எடுத்துக்கொள்கிறது என்றும் கடந்த பதிப்புகளில் இருந்த 20 லைப்ரரிஸ் இந்த பதிப்பில் நீக்கப்பட்டது தான் அதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

இந்த வாட்ஸ்ஆப் செயலியில் பயன்படும் 'லைவ் லொகேஷன்" தொழில்நுட்பம் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தொழில்நுட்பம்:

வாட்ஸ்ஆப் நிறுவனம் வரும் காலங்களில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவரும் எனத் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Don't Miss it.

Powered by Blogger.