Header Ads

HP நிறுவனத்தின் புதிய பெவிலியன் பவர் நோட்புக் லேப்டாப் அறிமுகம்

HP நிறுவனம் கடந்த சில வருடங்களாக வாடிக்கையாளர்கலின் தேவைகளை புரிந்து படைப்புகளை தயாரித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான பிரிமியம் ஸ்பெக்டர் போர்ட்போலியோவை அடுத்து தற்போது மேலும் ஒரு புதிய பொருளான HP பெவிலியன் பவர் நோட்புக்கை அறிமுகம் செய்துள்ளது. இது வித்தியாசமான உருவாக்கம், தொழில் செய்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது



அழகிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த HP பெவிலியன் பவர் நோட்புக் பவர்புல் கிராபிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் திறன்களை கொண்டது. இந்த HP பெவிலியன் பவர் நோட்புக் HP நிறுவனத்தின் பெயரை உலகம் போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு. எதிர்கால படைப்புத் திறனாளிகளை உருவாக்குவதில் இந்த இந்த HP பெவிலியன் பவர் நோட்புக் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது.
இந்த HP பெவிலியன் பவர் நோட்புக் குறித்து HP இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் செயல் தலைவர் அவர்கள் கூறியபோது, 'வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்து திருப்திப்படுத்த வேண்டிய நிலையில் இந்த கண்டுபிடிப்பு நல்ல தீனியாக இருக்கும். எங்களது வாடிக்கையாளர்களின் டெக்னாலஜி பசியை தீர்க்கும் வகையில் எங்கள் படைப்பு இருக்க அவர்களது சிறந்த எதிர்பார்ப்புதான் காரணம்.
எங்களது இந்த படைப்பு வாடிக்கையாளர்கள் குறிப்பாக படைப்பு திறன் கொண்ட பொறியாளர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதியதாக சாதிக்கும் வெறி கொண்ட படைப்பு திறனாளிகளுக்கு எங்களுடைய இந்த தயாரிப்பு முழு திருப்தி தரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என்று கூறியுள்ளார் சீனாவின் எல்லா பொருட்களுமே போலி தான் போல; பூமியோட மோதப்போகும் சீன ஸ்பேஸ்ஷிப்.!


இந்த வார்த்தைகள் விற்பனைக்காக கூறப்படும் சாதாரண வார்த்தைகள் இல்லை என்பது இந்த HP பெவிலியன் பவர் நோட்புக்கிற்கு கிடைத்துள்ள வரவேற்பில் இருந்து தெரியவருகிறது. இந்த HP பெவிலியன் பவர் நோட்புக் லேப்டாப்பில் Nvidia GeForce GTX 1050 கிராபிக் கார்ட் இருப்பதோடு லேட்டஸ்ட் 7வது ஜெனரேசன் குவாட்கோர் பிராஸசரும் உள்ளது.
மேலும் 128GB PCIe SSD +1TB HDD ஸ்டோரேஜ் உள்ள இந்த லேப்டாப், மிக வேகமாக முழுமையாக சார்ஜ் செய்யும் வகையில் உள்ளது. அதாவது 90 நிமிடங்களில் 90% சார்ஜ் ஆகிவிடும். அனைத்து வசதிகளுடனும் கூடிய இந்த லேப்டாப்புகள் பயனர்களுக்கான நாள் முழுவதும் பணியாற்றும் வகையில் உதவும்


மேலும் இந்த லேப்டப்பில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள MS ஆபீஸ் ஹோம், மற்றும் மாணவர்களுக்கான 2016 பதிப்பும் உள்ளது. அதாவது MS வேர்ட், MS பவர்பாயிண்ட், MS எக்ஸல், MS ஒன்நோட் ஆகியவை மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். மேலும் இதில் IPS FHD டிஸ்ப்ளேவும், B&O ஆடியோவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்டல் கீ போர்டு அம்சம் உள்ள இந்த லேப்டாப்பில் அதில் பச்சை நிறத்தில் பின்புற வெளிச்சமும் இருக்கும் என்பதும் நல்ல அனுபவத்தை தரும் ஸ்பீக்கரும் உள்ளது இந்த HP பெவிலியன் பவர் நோட்புக் மூன்றுவிதமான விலைகளில் கிடைக்கின்றது. ரூ.77,999 என்ற விலையில் இருந்து இந்தியாவில் கிடைக்கும் இந்த லேப்டாப் கருப்பு, பச்சை நிறங்களில் கிடைக்கும்.

Don't Miss it.

Powered by Blogger.