Header Ads

அட்டகாசமான அப்டேட் : வாட்ஸ்ஆப் க்ரூப் வாசிகள் "மிகவும் எதிர்பார்த்த" ஒரு அம்சம்.!

வாட்ஸ்ஆப் கடந்த வாரம் அதன் லைவ் லோக்கேஷன் ஷேர் அம்சத்தினை அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு உருட்டியது என்பதை அறிவோம். பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த மெஸேஜிங் தளம்ள அதன் பயனர்களுக்கு இன்னும் சில அம்சங்களைக் கொண்டு வரும் முனைப்பில் பணியாற்றுவது போல தெரிகிறது.
அதில் ஒன்றுதான் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அம்சம். இந்த அம்சம் மூலம் பயனர்கள் கான்பிரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதாவது ஒரேநேரத்தில் தங்கள் நண்பர்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ குரல் மற்றும் வீடியோ அழைப்பு ஆகிய இரண்டையும் நிகழ்த்தலாம்.




வரவிருக்கும் நாட்களில் உருட்டப்படும்

இந்த வாட்ஸ்ஆப் அம்சம் பற்றி நாம் கேட்பது இதுவொன்றும் முதல்முறையல்ல. ஆனால் இம்முறை, புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப்பேட்டா இன்ஃபோ மூலம் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு விரைவில் வரவிருக்கும் நாட்களில் உருட்டப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

க்ரூப் கால் அம்சத்தை உருட்டலாம்.

வாட்ஸ்ஆப்பேட்டா இன்ஃபோ படி, வாட்ஸ்ஆப் அதன் அடுத்த பீட்டா மேம்படுத்தலில் க்ரூப் கால் அம்சத்தை உருட்டலாம். பயனர்கள், 2.17.70 பீட்டா வெர்ஷனில் இந்த அப்டேட்தனை பெறுவார்கள் என்பதையும் வெளியான தகவல் குறிப்பிடுகிறது. அதாவது இந்த ​​புதிய அம்சம் பீட்டா பயனர்களால் சோதிக்கப்படும், இறுதியில் அனைத்து பயனர்களுக்கும் உருட்டப்படும்.


"சேன்ஜ் நம்பர்"

மேலும் ஆண்ட்ராய்டு வெர்ஷனின் புதிய பீட்டா பதிப்பு, சில முக்கிய புதுப்பிப்புகளுடன் வெளிவருகிறது. பயன்பாட்டின் அளவு (சைஸ்) குறைக்கப்பட்டிருக்கும் மறுபக்கம் இந்த புதிய ​​பீட்டா பதிப்பு தன் பயனர்களுக்கான "சேன்ஜ் நம்பர்" அம்சத்தையும் வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பின் ஒரு பகுதியாக வெளியிட்டுள்ளது.



தோராயமாக 6எம்பி.!

டெக்னொபோலிஸ் என்ற தொழில்நுட்ப வலைத்தளத்தின்படி, சமீபத்திய 2.17.375 பதிப்பானது பதிவிறக்கம் மற்றும் நிறுவும் போது குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது. தோராயமாக 6எம்பி எடுத்துக்கொள்கிறது என்றும் கடந்த பதிப்புகளில் இருந்த 20 லைப்ரரிஸ் இந்த பதிப்பில் நீக்கப்பட்டது தான் அதற்கு காரணம் என்றும் அறியப்படுகிறது.

அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும்.!

மற்றொரு முக்கிய அப்டேட் ஆக, நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் எண்ணை மாற்றும் போது, ​உங்கள் வாட்ஸ்ஆப் தொடர்புகளுக்கு குறிப்பிட்ட காண்டாக்ட் நம்பர் மேம்படுத்தல் சார்ந்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும். உங்கள் மொபைல் எண்ணை மாற்றும் ஒவ்வொரு முறையும் இந்த அம்சம் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

473 சிறிய அளவிலான பிழை.!

மேலும் இந்த "சேன்ஜ் நம்பர்" அம்சத்தை, எந்தவொரு தனிப்பட்ட தொடர்புகளுக்கும் மற்றும் க்ரூப்களுக்கும் கூட கஸ்டமைஸ் செய்யலாம். இந்த இரண்டு பிரதான புதுப்பித்தல்களுடன், ஆப்பில் உள்ள சுமார் 473 சிறிய அளவிலான பிழைகளையும் நீக்கம் செய்துள்ளது.


அனைத்து பதிப்புகளுக்கும் உருட்டப்படுமா.?

இந்த புதிய அம்சங்கள் இன்னும் பீட்டா பதிப்பின் பகுதியாகவே இருக்கிறது மற்றும் இந்த அம்சங்கள் உடனடியாக அனைத்து பதிப்புகளுக்கும் உருட்டப்படுமா என்பது சார்ந்த வார்த்தைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாண்ட், கலர் மற்றும் லின்க்.!

வாட்ஸ்ஆப் சமீபத்தில் அதன் ஸ்டேட்டஸ் அம்சத்தில் ஒரு புதிய மேம்படுத்தலை உருட்டியது. அது டெக்ஸ்ட் அடிப்படையிலான ஸ்டேட்டஸ் அமைக்க பயனர்களை அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி - பாண்ட், கலர் மற்றும் லின்க் இணைப்பு ஆகிய விடயங்களிலும் "கஸ்டமைஸ்" நிகழ்த்திக்கொள்ள பயனர்களை அனுமதிக்கிறது.

Don't Miss it.

Powered by Blogger.