Header Ads

வாட்ஸ்ஆப்பில் டெலிட் அம்சம் உருட்டல் : அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது எப்படி.?








ஒரு நீண்ட காத்திருப்பிற்கு பின்னர், வாட்ஸ்ஆப்பில் நாம் மியாகவும் எதிர்பார்த்த அம்சமான டெலிட் பார் எவ்ரிஒன் அல்லது ரீகால் அம்சம் அதாவது அனுப்பிய மெசேஜை திரும்பப்பெறும் அம்சமானது அனைவர்க்கும் உருட்டப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் பீட்டாஇன்போ (WaBetaInfo) தளத்தின் வழியாக ஆண்ட்ராய்டு,ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் தொலைபேசி பயனர்களுக்கு இந்த புத்தம் புதிய அம்சம் உருட்டப்பட்டுள்ளதென்பது அறியப்பட்டுள்ளது. இதென்ன அம்சம்.? 

இதன் நன்மை என்ன.? இதை பயன்படுத்துவது எப்படி.? 
இதிலுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் என்னென்ன.?

வாட்ஸ்ஆப்பின் கனவு அம்சம்.! 



இனி வாட்ஸ்ஆப்பில் நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெசேஜை ரீகால் செய்யலாம். அதாவது சென்ட் ஆனதொரு மெசேஜை நீங்கள் டெலிட் செய்யலாம். இன்று தொடங்கி இந்த அம்சம் மெல்ல மெல்ல அனைத்து வகையான பயனர்களுக்கும் கிடைக்கப்பெறும்.



எதையெல்லாம் ரீகால் செய்யலாம்.? 

அனுப்புனர் மற்றும் பெறுநர் ஆகிய இருவருக்குமே இந்த அப்டேட் கிடைத்தபின்னர் தான் இந்த அம்சம் செயலாக்கம் பெறும் என்பதும், இந்த அம்சத்தின் கீழ் கிப் (GIF), டெக்ஸ்ட் மெசேஜ்கள், படங்கள், குரல் செய்திகள், ,லொகேஷன், ஸ்டிக்கர்கள் (வரும் காலங்களில்), தொடர்பு எண்கள், ஸ்டேட்டஸ் ரிப்ளை போன்ற அனைத்து வகையான மெசேஜ்களையும் திரும்ப பெறலாம்.

ஜிமெயில் அண்டூ அம்சத்தினை போலவே தான் .! இப்போது வரை இந்த அம்சம் எப்படி வேலை செய்யுமென்ற உத்தியோகபூர்வ வார்த்தைகள் இல்லை. இருப்பினும் இந்த அம்சம் ஜிமெயில் அண்டூ (Gmail Undo) அம்சம் போலவே தான் செயல்படும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.






உங்கள் மெசேஜின் நகல் ஒன்றை பெறுநருக்கு அனுப்பும்.! 



அதாவது இந்த அம்சம் இயக்கப்பட்டிருக்கும் போது, ​​நீங்கள் ஒரு குறிப்பிட்ட மெசேஜை திரும்பப்பெறுகையில், வாட்ஸ்ஆப் ஆனது உங்கள் மெசேஜின் நகல் ஒன்றை பெறுநருக்கு அனுப்பும். பெறுநர் ஒரு போலியான நகலைப் பெறுவார். ஆனால் அது சார்ந்த எந்த விதமான நோட்டிபிக்கேஷனையும் பெற மாட்டார், குறிப்பாக அந்த செய்தி அவரின் சாட் ஹிஸ்ட்ரியில் சேமிக்கப்படாது.

குறிப்பிட்ட 7 ஏழு நிமிடங்களில்.! 



இந்த அம்சம் ஒரு நேர-உணர்திறன் மிக்க அம்சம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். செய்தியை அனுப்பும் ஏழு நிமிடங்களுக்குள் மட்டுமே செய்திகளை ரீகால் செய்ய முடியும். குறிப்பிட்ட 7 ஏழு நிமிடங்களில் ஒரு செய்தியை நீங்கள் ரீகால் செய்யவில்லையெனில் மறுபடியும் அதை ரீகால் செய்யவே முடியாது. 

எப்போதெல்லாம் இந்த அம்சம் வேலை செய்யாது.? 






மேற்கோளிடப்பட்ட (அதாவது குறிப்பிட்ட மெசேஜை தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் ரிப்ளை ) மெசேஜின் கீழ் அனுப்பட்ட மெசேஜை திரும்பப்பெற முடியாது. ஒரு பிராட்காஸ்ட் பட்டியலில் (அதாவது குறிப்பிட்ட நண்பர்களின் எண்களை உள்ளடக்கிய பயனரால் தனிப்பட்ட முறையில் சேமிக்கப்பட்ட பட்டியல்) அனுப்பிய மெசேஜை ரீகால் செய்ய முடியாது. 



சிம்பியன் இயங்குதளத்தில் வேலை செய்யாது.! 


மேற்கூறப்பட்டது போல, 7 நிமிட நேர காலத்திற்குள் ரீகால் செய்யப்படாத எந்தவொரு மெஸேஜையும் டெலிட் திரும்பப்பெற முடியாது. பழைய வாட்ஸ்ஆப் பதிப்பை கொண்டவர்களுக்கும் இந்த அம்சம் வேலைசெய்யும் ஆனால் நிச்சயமாக இந்த அம்சம் சிம்பியன் இயங்குதளத்தில் வேலை செய்யாது.

கிடைக்கப்பெறவில்லை என்ற வழக்கில்.! 



விரைவில் அனைவரையும் வந்தடையும் இந்த அம்சம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை நீங்கள் எந்த நேரத்திலும்ல்ப பெறலாம். கிடைக்கப்பெறவில்லை என்ற வழக்கில், நீங்கள் உங்கள் வாட்ஸ்ஆப்பை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் நிறுவலாம். அதற்கு முன்னர் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் சென்று > சாட் > பேக் அப் செய்ய மறக்க வேண்டாம்.!

Don't Miss it.

Powered by Blogger.