Header Ads

உங்களுக்கு தெரியாத இரகசிய ஸ்மார்ட்போன் அம்சங்கள்.!






இப்போது வரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன, அவை அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் உள்ளது. ஆண்ட்ராய்டு போனை வாங்கும் பலர் அதில் இருக்கும் பல செய்திகளையும், பயன்பாடுகளையும் சரியாக அறிந்து கொள்வதில்லை. போனை வாங்கியவுடன் அதை பற்றிய செய்திகளையும் படித்து பயன் அடைய வேண்டும். இதனால் உங்களுக்கும் உங்கள் போனுக்கும் எந்த பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ள முடியும்.
உங்கள் ப்ளே ஸ்டோரில் புதியதாக ஆப்ஸ் நிறுவினால் உங்கள் போனின் திரையில் ஒரு குறுக்குவழிக்கான ஐகான் வரும். இது வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால் ப்ளே ஸ்டோரை திறங்கள் மேலே இடது பக்கத்தில் இருக்கும் மூன்று பாரை தட்டவும். பின் செட்டிங்கை திறக்கவும். அங்கே 'Add icon to Home Screen" என்ற ஐகானை காண்பீர்கள். அதன் பக்கத்தில் இருக்கும் குறியை நீக்கவும். இதனால் தானியங்கி குறுக்குவழியை செயல் இழக்கம் செய்ய முடியும்.

லாக் ஸ்கிரீன் மெசேஜ்:



ஸ்மார்ட் போன்களில் பலரும் அறியாத வசதியாக ‘லாக் ஸ்கிரீன் மெசேஜ்' எனும் தகவல் பதிவு வசதி உள்ளது. விபத்து காலங்களில் இது பயனளிக்கும். ஒருவர் விபத்தில் சிக்கும்போது அவருக்கு வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவிக்க உதவியாக இருப்பவை விபத்தில் சிக்கியவரிடம் இருக்கும் அடையாள அட்டைகளும், செல்போனும்தான். அடையாள அட்டையை வைத்திருக்காவிட்டால், செல்போன் மட்டுமே தகவல் தெரிவிக்க ஒரே வழி.

சிசிடிவி :

உங்கள் வீட்டில் சிறந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்க பழைய ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும், உங்கள் சாதனத்தை ஒரு சிசிடிவி கேமராவாக மாற்றமுடியும். மேலும் இதுபோன்ற ஸ்மார்ட்போன்களில் உடனடியாக புகைப்படங்களை அனுப்பும் வசதியை செயல்படுத்த முடியும்.

செயலி:

உங்களுடைய ஸ்மார்ட்போன்களில் anti-theft app- செயலியைப் பயன்படுத்தினால் மொபைல்போன் திருடுபோனலும் மிக எளிமையாக
கண்டுபிடிக்க முடியும், மேலும் ஜி.பி.எஸ் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும்.அதன்பின் anti-theft app- செயலியைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோ வீடியோ போன்ற பல தகவல்களை அழிக்க முடியும்.


டெலிகிராம்:

டெலிகிராம் பாதுகாப்பான சேட்டிங் வேண்டும் என்பவர்கள் தேர்வு செய்வது டெலிகிராம் செயலியைத்தான். உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளதால் ரகசியமான தகவல்களை பயமின்றி சேட்டிங் செய்யலாம். அதுமட்டுமின்றி 1ஜிபி ஃபைல்கள் வரை அனுப்பும் வகையில் இந்த செயலி சப்போர்ட் செய்யும். மேலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போலவே இந்த செயலியிலும் புகைப்படங்கல், ஆடியோ, வீடியோ உள்ளிட்ட பலவற்றை அனுப்பும் வசதி உண்டு.

டாஷ் கேம்:



உங்கள் காரில் டி.வி.ஆர் (டாக் கேம்) ஆக பயன்படுத்தலாம், சிறந்த ஸ்மார்ட்போனை பொறுத்தி மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.
மேலும் இந்த செயல்முறை அனைவருக்கும் பயன்படும்.சாலையின் சிறந்த பார்வைக்கு இந்த கேமரா அமைப்பை அதிகமாக பயன்படும்.

மாடல் எண்:

உங்களுடைய ஸ்மார்ட்போனின் மாடல் எண்ணை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும், ஸ்மார்ட்போனில் உள்ள மெனுவில் மிக
எளிமையாக அறிந்துகொள்ள முடியும். உதரணமாக செட்டிங்ஸ்பகுதிக்கு சென்று அபௌட் தி போன் என்ற பகுதியை 7முறை கிளிக் செய்தால் போனின் மாடல் எண்ணை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த பயன்பாட்டின் மூலம் உங்களுடைய ஸ்மார்ட்போனின் செயல்திறன், சிக்னல் வரவேற்பு தரம் மற்றும் ஸ்மார்ட்போனின் அமைப்பு போன்ற அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.

யுவி லைட்:

ஸ்மார்ட்போன்களில் யுவி லைட் (UV light) முறையை மிக எளிமையாக பயன்படுத்த முடியும். மேலும் இந்த பயன்பாடு சில ஸ்மார்ட்போன்களில் மட்டும் பயன்படுத்த முடியும்.உதரணமாக ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள கேமராவில் நீங்கள் தேர்வுசெய்த வண்ணங்களைப் பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய முடியும்.


கட்டுமான அளவு;

உங்களுடைய ஸ்மார்ட்போன்களில் கட்டுமான அளவு பற்றிய புள்ளிவிவரங்களை தெரிந்துகொள்ள சிறந்த ஆப் வசதி உள்ளது, இவை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.கூகுள் பிளே ஸ்டோரில் இந்த கட்டுமான அளவு பற்றிய புள்ளிவிவரங்களை பயன்படுத்தும் ஆப் உள்ளது.

புள்ளிவிவரம்:

ஸ்மார்ட்போனில் நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் ஆப் பற்றிய புள்ளிவிவரங்களை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். ஆப்பிள்
போன்களில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று பேட்டரி அமைப்பை தேர்வுசெய்யவும், ஆண்ட்ராய்டு மொபைல் பொறுத்தவரை ஆப் பதிவிறக்கம்செய்து பயன்படுத்த முடியும்.



கருப்பு, வெள்ளை;

ஸ்மார்ட்போனில் கருப்பு, வெள்ளை ஸ்கிரீன் போன்று பயன்படுத்த முடியும், அதற்க்கு (monochrome mode)-என்ற பகுதியை தேர்வு செய்யவேண்டும்.இந்த செயல்முறையை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த முடியும்.

Don't Miss it.

Powered by Blogger.