Header Ads

உலகளாவிய இமோஜிக்களை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்

சமூக வலைத்தளங்களில் முன்னணி இடத்தில் உள்ள வாட்ஸ் அப், தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு புதிய வசதிகளை தர ஆய்வு செய்து வருகிறது. அனுப்பிய மெசேஜ்களை டெலிட் செய்வது, வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால்களை மாற்றி மாற்றி பேசுவது உள்பட பல புதிய வசதிகள் விரைவில் வரவுள்ளது



whatsapp-rolls-a-new-set-universal-emojis-android-beta

இந்த நிலையில் தற்போது புதிய உலகளாவிய அளவில் புகழ் பெற்ற அனைவரும் விரும்பும் வகையிலான இமோஜிகளை அறிமுகம் செய்ய வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது. ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்ஷனில் விரைவில் வரவுள்ள இந்த இமோஜிக்கள் ஆப்பிள் நிறுவனத்தின் இமோஜிக்களுக்கு இணையாக இருக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.
மொபைல் ஓஎஸ்-க்கும் பொருந்தும் வகையில் இந்த இமோஜிக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் இதற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்ஷன் 2.17.364 என்ற வெர்ஷனில் இருந்து இந்த புதிய இமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதலே வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் இந்த புதிய இமோஜிக்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்
வாட்ஸ் அப் டெக்னீஷியன்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய மாடல் இமோஜிக்களை ஆப்பிள் நிறுவனத்தின் இமோஜிக்களுடன் ஒப்பிடும்போது ஒருசில சிறிய வேறுபாடுகளே கொண்டிருந்தாலும், நல்ல கற்பனைத்திறனுடன் படைக்கப்பட்டுள்ளதாக பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர்.


மேலும் வாட்ஸ் அப் நிறுவனம் இந்த இமோஜிக்களை பீட்டா வெர்ஷனாக மட்டுமே வெளியிட்டுள்ளது. அதிகாரபூர்வமாக அதன் பயனாளிகளுக்கு இறுதி வடிவம் பெற்ற பின்னரே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என தெரிகிறது. இந்த பீட்டா வெர்ஷனில் ஏற்படும் குறைகள் குறித்தும் அவற்றை நீக்குவது குறித்து ஆராய்ந்த பின்னரே வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தலாம்.
மேலும் இந்த இமோஜிக்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு வித மாடல் மொபைல் போன்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு
இந்த புதிய டிசைன் இமோஜிக்கள் வெளியிடும் நாள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Don't Miss it.

Powered by Blogger.