Header Ads

வாட்ஸ்ஆப்பில் ஆட்டோமெட்டிக்காக போட்டோக்கள் டவுன்லோட் ஆவதை தடுப்பது எப்படி?

உலகெங்கிலும் 1.2 பில்லியன் மக்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுகிறது, இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் அளவிற்க்கு அதிகமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகிய இருவர்களால் இது உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் ஏற்கவே பணி புரிந்தவர்கள். இவர்கள் யாஹூ நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் பேஸ்புக் நிறுவனத்தில் பணி புரிவதற்காக விண்ணப்பித்திருந்தனர். எனினும் அது பேஸ்புக் நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்டது.
இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட இருவராலும் உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் சேவையை பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க வேண்டியிருந்தது. தற்போது வாட்ஸ்ஆப்பில் உள்ள படங்கள், வீடியோக்கள் சேமிப்பதை நிறுத்துவது எப்படி எனப்பார்ப்போம்.

வாட்ஸ்ஆப்:



வைஃபை உடன் இணைக்கப்பட்டிருக்கும்போது வாட்ஸ்ஆப் கேலரியில் தானாகவே போட்டோ மற்றும் வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ளும். மேலும் அந்த வைஃபை செட்டிங்க்ஸ் சென்று படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை வரமால் மாற்றி அமைக்கலாம்.

செட்டிங்க்ஸ் ;

முதலில் வாட்ஸ்ஆப் செட்டிங்க்ஸ் அமைப்பை தேர்ந்தேடுக்கவேண்டும். தரவு மற்றும் சேமிப்பக பயன்பாட்டில் சில அமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும்.


ஆட்டோ:

இந்த மெனுவில், மேலே உள்ள மீடியா ஆட்டோ-பதிவிறக்க விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள்.

ஆவணங்கள்:



புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, நெவர் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

கேமரா ரோல் :

அதன்பின் நீங்கள் கைமுறையாக பதிவிறக்க விரும்பும் போட்டோ மற்றும் வீடியோவை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
ஸ்மார்ட்போன் கேமராவில் ரோல்லின் தோற்றத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தடுக்க மிக எளிமையாக தேர்வுசெய்யலாம், அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது, அமைப்புகள் மெனுவில் செட்டிங்க்ஸ் சென்று கேமரா ரோல் மெனுவைத் திறந்து, அதை ஆப் செய்ய வேண்டும்.

Don't Miss it.

Powered by Blogger.