Header Ads

தொலைந்த அல்லது திருடுபோன ஐபோனை கண்டுபிடிப்பது எப்படி?

ஆப்பிள் ஐபோன் என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில் அந்த போன் தொலைந்தோ அல்லது திருடு போனாலோ நம் மனம் என்ன பாடுபடும் என்பதை சொல்ல தேவையே இல்லை




learn-how-use-find-my-iphone-find-your-lost-or-stolen-phone


ஆனால் ஐபோனை பொருத்தவரையில் தொலைந்துவிட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, அனைத்து ஐபோன்களிலும் 'ஃபைண்ட் மை போன்' என்ற செயலியுடன் தான் ஐபோன் அல்லது ஐபேட் வெளியாகிறது. எனவே இதன் மூலம் தொலைந்த அல்லது திருடுபோன ஐபோனை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்
இந்த செயலி அனைத்து ஐஒஎஸ் உபகரணங்களிலும் செயல்படும். குறிப்பாக ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் ஆகியவற்றை கூற்லாம். போனில் உள்ள 'பைண்ட் மை போன்' ஆப்சனை ஒருமுறை செட் அப் செய்துவிட்டால் போதும், அந்த போன் இண்டர்நெட்டில் கனெக்ட் ஆகும்போது இன்னொரு ஐஒஎஸ் உபகரணம் மூலம் iCloud.com இணையதளத்தில் கண்டுபிடிக்கலாம்
ஸ்டெப் 1: முதலில் இன்னொரு ஐஒஎஸ் உபகரணத்தில் இருந்து ஃபைண்ட் மை ஐபோன்' செயலிக்கு செல்லுங்கள்


ஸ்டெப் 2: பின்னர் அந்த செயலிக்குள் சென்று உங்களது ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து எப்போதும் போல் லாகின் செய்யுங்கள்
ஸ்டெப் 3: இப்போது உங்கள் ஐபோன் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது போன்ற ஒரு ஆப்சன் வரும்
ஸ்டெப் 4: இந்த ஸ்டெப்ப்பில் உங்களது ஃபைண்ட் மை ஐபோன் செயலியில் உங்கள் போன் கடைசியாக இருந்த லோகேசன் எது என்ற ஆப்சன் வரும்
ஸ்டெப் 5: இப்போது நீங்கள் தொலைந்த போனின் லொகேஷனை தெரிந்து கொள்ளலாம்
ஸ்டெப் 6: ஐபோன் மாடல் மற்றும் ஐஒஎஸ் வெர்சனை குறிப்பிட்டு தொலைந்த போனில் உள்ள டேட்டாக்களை நீங்கள் அழித்துவிடலாம். இதனால் உங்கள் டேட்டாக்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்
ஐகிளவுட் மூலம் கண்டுபிடிப்பது எப்படி?



ஸ்டெப் 1;
 கம்ப்யூட்டரில் iCloud.com சென்று அதில் உங்களது ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்து லாகின் செய்யுங்கள்
ஸ்டெப் 2: இப்போது ஃபைண்ட் ஐபோன் என்ற ஆப்சனை க்ளிக் செய்து அது தேடும் வரை காத்திருங்கள்
ஸ்டெப் 3: பச்சை புள்ளி ஒன்றின் மூலம் தொலைந்த ஐபோன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம். ஐபோன் இருக்கும் இடத்தை தெளிவாக பார்க்க வேண்டும் என்றால் அதை ஜூம் செய்து கொள்ளலாம்
ஸ்டெப் 4; இந்த ஸ்டெப்பில் நீங்கள் தொலைந்த போனில் இருந்து சத்தத்தை வரவழைக்கலாம். ஒருவேளை உங்கள் வீட்டிலேயே எங்காவது மறந்து வைத்திருந்தால் அந்த சத்தத்தை கேட்டு கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை திருடு போயிருந்தால் உடனே உங்களது டேட்டாவை அழித்துவிடலாம்

Don't Miss it.

Powered by Blogger.