Header Ads

பேஸ்புக்கில் நேரடியாக உணவு முன்பதிவு செய்யும் முறை அறிவிப்பு

ஸ்மார்ட்போன் யுகம் எல்லைகளை கடந்து வளர்ச்சியடைந்திருப்பது நம்மை மேலும் சோம்பேறிகளாக்கி விட்டது எனலாம். முன்பு ஓட்டலில் சாப்பிட உட்கார்ந்திருக்கும் இடத்தை விட்டு, அதற்கென சில மணி நேரங்களை செலவிட்டு, சிறிய பயணம் செய்து சாப்பிட்டும். ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறி விட்டது.




facebook-now-adds-direct-food-ordering-feature




ஆன்லைனில் கிடைக்காத பொருட்களே இல்லை என்ற நிலையில், இவை நாம் இருக்குமிடத்தில் உணவினை சுடச்சுட டெலிவரி செய்து விடுகின்றன. அந்த பட்டியலில் பேஸ்புக் செயலியும் இணைந்திருக்கிறது. உணவு டெலிவரி செய்யும் சேவையை விரைவில் வழங்க இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் சத்தமில்லாமல் பேஸ்புக் செய்து வந்த சோதனை விரைவில் துவங்கப்பட இருக்கிறது.
தற்சமயம் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த சேவை மற்ற நாடுகளில் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.


அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் மபல்வேறு உணவகங்களின் உணவை பேஸ்புக்கில் இருந்த படியே வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே அதனை சுவைத்து மகிழ முடியும்.
சிறிய ரோட்டு கடைகள் முதல், மிகப்பெரிய பிரான்டு வரை அனைத்து வகையான உணவகங்களில் இருந்தும் உணவை பெற முடியும். இத்துடன் ஒருவர் தேர்வு செய்யும் உணவகம் குறித்து தங்களது நண்பர்களிடம் கேட்டறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கின் எக்ஸ்புளோர் மெனுவில் ஆர்டர் ஃபுட் எனும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவகங்களை தேர்வு செய்து, பிடித்தமான உணவு வகைகளை வாங்கி ருசிக்க முடியும்.

Don't Miss it.

Powered by Blogger.