Header Ads

வைரலாகும் 'ப்ளட் டோனர்' அம்சம் : எப்படி வேலை செய்கிறது, ஆக்டிவேட் செய்வதெப்படி.?

இரத்த தான முகாம்கள், இரத்த வங்கிகள் மற்றும் அதனை தேடும் நபர்கள் ஆகியோர்களை ஒன்றிணைக்கும் புதிய அம்சத்தை பேஸ்புக் உருவாக்கியுள்ளது. இந்த அம்சமானது, இந்திய 'ப்ராடெக்ட் டெவலப்பர்' ஆன ஹேமா புடரஜூ உடன் இணைந்து உருவாக்கம் பெற்றுள்ளதாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இதனால் என்ன பயன்.?

 இந்த அம்சத்துடன் இணைந்து ஒரு 'ப்ளட் டோனர்' ஆகுவது எப்படி.?





குறிப்பிட்ட தொடர்புகள் அல்லது வலையமைப்பிற்கு வெளியே உள்ள நபர்களிடம் இரத்தம் பெறவதும் அல்லது இரத்தம் கொடுப்பதும் எவவ்ளவு கடினமான காரியமென்பதை நம்மில் பெரும்பாலானோர்கள் அறிவோம். அதனை மனதிற்கொண்டு உருவாக்கம் பெற்ற மிக எளிமையான 'டூல்' தான் இந்த அம்சம்.

மிகவும் வைரலாகி வரும் 'ப்ளட் டோனர் இலாப நோக்கற்ற நிறுவனங்கள், இரத்த வங்கிகள் மற்றும் இரத்தம் வழங்குபவர்கள்/வாங்குபவர்கள் ஆகியோர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ள இந்த 'ப்ளட் டோனர்' அம்சத்தின் கீழ் இயங்கும் ஒரு நபருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ இரத்தம் தேவைப்பட்டால் அருகாமையில் உள்ளவர்களுக்கு ஒரு அறிவிப்பு கிடைக்கப்பெறும். குறிப்பிட்ட வகை இரத்தத்தை பெற விரும்புபவர்கள், இரத்தம் வழங்க தயாராக உள்ள சாத்தியமான நபர்களுடனும் தொடர்பு கொள்ளவும் இந்த அம்சம் உதவுகிறது.


வழிமுறை #01 



இந்திய பேஸ்புக் பயனர்களின் மத்தியில் மிகவும் வைரலாகி வரும் இந்த 'ப்ளட் டோனர்' அம்சத்தை நீங்களும் ஆக்டிவேட் செய்ய விரும்பினால். கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பபற்றவும். முதலில், பேஸ்புக் நியூஸ் ஃபீட்டில் அவ்வப்போது காட்சிப்படும் 'ப்ளட் டோனர் ' அம்சத்தை பார்த்தால், அதை கிளிக் செய்து உள்நுழையவும்.
வழிமுறை #02 

அதன்பின்னர், நீங்கள் எந்த இரத்த வகை இரத்தம் கொண்டவர்கள் என்பதை தேர்வு செய்யவும். அதனை தொடர்ந்து, நீங்கள் முன் எப்போதும் இரத்தம் வழங்கியது உண்டா.? என்ற கேள்வி உட்பட சில கணக்கெடுப்பு சார்ந்த கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும்.

வழிமுறை #03 


இப்போது, உங்களுக்கான 'ப்ளட் டோனர்' வலைப்பின்னல் அம்சம் திறக்கப்படும். நீங்கள் இந்த செய்தியை பரப்ப விரும்பினால், உங்கள் சுயவிவரப் பக்கத்தில் இதனை வெளிப்படுத்தலாம் அதாவது ஸ்டேட்டஸ் போல பகிர்ந்து கொள்ளலாம்.


நோட்டிபிக்கேஷன் கிடைக்கும் 

ஏதேனும் இரத்தம் தேவை என்ற கோரிக்கை உருவாக்கப்பட்டால், தேவையான இரத்த வகை கொண்ட 'ப்ளட் டோனர்'களுக்கு "குறிப்பிட்ட" நோட்டிபிக்கேஷன் கிடைக்கும். அவர்கள் பதிலளிக்க விரும்பினால், அவர்கள் நேரடியாக கோரிக்கையின் வாயிலாக அல்லது வாட்ஸ்ஆப், மெஸஞ்சர் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளலாம்.
ப்ரொபைலில் 'இரத்த தானம்' பதிவு இணைப்பு 

வரவிருக்கும் நாட்களில் பயனர்களின் சுயவிவரப் பக்கத்தில் 'இரத்த தானம்' பதிவு இணைப்பை பேஸ்புக் நிறுவனம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Don't Miss it.

Powered by Blogger.