Header Ads

8 வகை ஸ்கேம் இமெயில்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய டெக்னாலஜி உலகில் இமெயில் பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் ஸ்கேம் என்று சொல்லக்கூடிய மோசடி இமெயில் குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த ஸ்கேம் இமெயில் நமக்கு பல தொல்லைகள் தரும் என்பதால் இப்படிப்பட்ட இமெயில்களின் வகைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

spam mail




லாட்டரி ஸ்கேம் லாட்டரி என்ற பெயரில் ஸ்கேம் இமெயில் பலருக்கு வந்திருக்கும். உங்களுக்கு மிகப்பெரிய தொகை லாட்டரி பரிசு கிடைத்திருப்பதாகவும், அந்த தொகையை பெற சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும் இமெயில் வருவதுண்டு. இந்த விஷயத்தில் முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எந்தவித லாட்டரியிலும் நாம் கலந்து கொள்ளாமல் பரிசு கிடைக்காது. எனவே இவ்வகை இமெயில்களை யோசிக்காமல் டெலிட் செய்துவிடுங்கள்


சர்வே ஸ்கேம் 


சர்வே ஸ்கேம் என்ற இமெயில்களை அனுப்பி அதில் கலந்து கொண்டு நமது கருத்தை கேட்கும் வகையில் சில இமெயில்கள் வரும். அவற்றிற்கு ஒரு தொகை நமக்கு கிடைக்கும் என்றும் இருக்கும். உலக வெப்பமாகுதல், உலகப்போர் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்த சர்வேயாக பெரும்பாலும் இருக்கும். 

ஆனால் இந்த சர்வே லிங்குகளை நீங்கள் க்ளிக் செய்தால் அது உடனே மால்வேர் இணையதளத்திற்கு அழைத்து செல்லும், அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்துவிடும் அபாயம் ஏற்படும். அதன்பின்னர் ஹேக்கர்கள் உங்கள் கம்ப்யூட்டரை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து உங்களது முக்கிய பரிவர்த்தனைகளின் பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. எனவே சர்வே இமெயில்களை ஓப்பன் செய்ய வேண்டாம்.

வீட்டில் இருந்தே வேலை: 



வீட்டில் இருந்து கொண்டே எளிதாக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற இமெயில்கள் வருவது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. வேலையை தொடங்கும் முன் சாப்ட்வேர் பெறுவதற்காக அல்லது பயிற்சிக்காக உங்களிடம் இருந்து ஒரு தொகையை பெறவே இந்த இமெயில்கள். இதுபோன்ற மோசடி இமெயில்களில் மாட்டிக்கொள்ளாமல் உடனே டெலிட் செய்துவிடுங்கள். வீட்டில் இருந்தே வேலை என்ற இமெயில்கள் பெரும்பாலும் பொய்யானவையே

ஃபிஷ்ஷிங் இமெயில் 


இந்த வகை இமெயில்கள் சட்டபூர்வமான அமைப்புகளைப் போலவே தோற்றமளிக்கும். ஆனால் உங்கள் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டுகளை அபகரித்து உங்களைக் கவர்ந்திழுக்கும் ஸ்கேம் என்பதால் இவ்வகை இமெயில்களில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

நைஜீரியா இமெயில் 




இவ்வகை இமெயில்கள் உங்களது நெருங்கிய நண்பரை போல தகவல் அனுப்புவார்கள். தங்களிடம் ஒரு பெரிய தொகை இருப்பதாகவும், அதை உங்களுடைய வங்கி கணக்குக்கு அனுப்ப உள்ளதாகவும், அதற்கான செலவுத்தொகையாக மட்டும் ஒரு தொகையை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிப்பார்கள். இவ்வகை இமெயில்கள் 419 மோசடி என்று பெயர். பெரும்பாலும் நைஜீரியாவில் இருந்து இவ்வகை இமெயில்கள் வருவதால் இவற்றையெல்லாம் படிக்காமலேயே அழித்துவிடலாம்

குவிஸ் ஸ்கேம்: 


இவ்வகை இமெயில்களில் உங்களுக்கு ஒரு கேள்வி கேட்டு பதிலளிக்குமாறும், அதற்கு உங்களுக்கு ஒரு பரிசுத்தொகை கிடைக்க்கும் என்றும், ஆனால் இதில் கலந்து கொள்வதற்கு ஒரு தொகை வேண்டும் என்றும் கேட்கும். நீங்கள் தொகையை அனுப்பினால் அதோடு அவ்வளவுதான். எனவே இவ்வகை இமெயில்களை தவிர்த்துவிடுவது நல்லது

மறைமுக URL ஸ்கேம்:


 இவ்வகை இமெயில்கள் பெரும்பாலும் டுவிட்டரின் URL போல் இருக்கும். இந்த வகை இமெயில்களை க்ளிக் செய்வதற்கு முன்னர் அதன் புரொஃபலை பார்த்து, அது உண்மையான அக்கவுண்ட் தானா? என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் அந்த URLல் உள்ளே மறைந்திருக்கும் மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரை ஹேக் செய்ய வைத்துவிடும்.

குழந்தை-சிகிச்சை ஸ்கேம்: 





நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி, அந்த குழந்தையின் சிகிச்சைக்காக ஒரு சிறு தொகையை மட்டும் அனுப்ப சொல்லி இமெயில் வரும். நீங்கள் இரக்க குணமுடையவராக இருந்தால் அந்த தொகையை ஆன்லைன் மூலம் அனுப்புவீர்கள். ஆனால் உங்களது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு உங்கள் அக்கவுண்டில் உள்ள அனைத்து தொகையையும் இழக்கும் நிலை இதனால் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உஷாராக இருங்கள்.







Don't Miss it.

Powered by Blogger.