Header Ads

பார்வையற்றோருக்கும் மீண்டும் கண் பார்வையை வழங்கும் 'பயோனிக் ஐ'

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அபரிமிதமாக இருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டு மருத்துவ துறையில் கண்கூடாக காண முடியும். மருத்துவ துறையில் இன்று பயன்படுத்தப்படும் சாதனங்கள் நாளுக்கு நாள் மேம்பட்டு கொண்டே இருக்கிறது. மேலும் பல்வேறு தனி திட்டங்கள் மனிதர்களிடையே இருக்கும் சிறு குறைபாடுகளை களைய பேருதவி புரிந்து வருகிறது.




bionic eye for blind people


அந்தவகையில், MIT சமீபத்தில் பதிவு செய்த புதிய திட்டத்திற்கான ஆய்வு அறிக்கையில் செகண்ட் சைட் எனும் நிறுவனத்தின் பயோனிக் ஐ சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த பயோனிக் ஐ பார்வையற்றோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஒரியன் என்ற பிரபல சாதனம் இந்த திட்டத்தின் முதல் கண்டுபிடிப்பாக அறியப்படுகிறது. இ்த திட்டம் உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சீராக இயங்க வெளிப்புற பிராசஸர் மற்றும் கேமராவுடன் கூடிய கண்ணாடிகள் கொண்டிருப்பதால் இதன்மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
bionic eye for blind people


இந்த சாதனத்தை கொண்டு பார்வையற்றவர்கள் வெளிச்சம் மற்றும் இருளை உணர முடிகிறது. இத்துடன் பொருட்களை சுற்றிய வெளிச்சம் மற்றும் சில எழுத்துக்களையும் பார்க்க முடிகிறது. தற்சமயம் இந்த சாதனத்தில் விலை 125,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.82,10,212.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலானோரால் இதனை வாங்க முடியாது.
bionic eye for blind people

தற்போது ஒரியன் மனித மூளையுடன் இணைக்கப்பட்டிருப்பதால் வெளிப்புறத்தில் இருந்து சிக்னல்களை உள்வாங்கி, அருகில் உள்ள பொருட்களை மட்டும் பார்க்க வழி செய்கிறது.
கூடுதலாக இந்த சாதனம் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி பார்வையற்றோர், கிளௌகோமா, புற்றுநோய், டயாபெடிக் ரெட்டினோபதி போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கும் பயன்படுத்த முடியும். எனினும் இதன் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இந்த சாதனத்தை பயன்படுத்த மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ரிசீவரை பொருத்த வேண்டும்.


மேலே குறிப்பிட்டதை போன்று ஒரியன் கண்ணாடி, வெளிப்புற பிராசஸர் கொண்ட கேமரா உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. தற்சமயம் சிலர் மீது சோதனை செய்து அதன்பின் கண் பார்வையற்றோர் மீது விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.


Don't Miss it.

Powered by Blogger.