Header Ads

இண்டர்நெட் இல்லாத நேரங்களில் யூட்யூப் வீடியோக்களை பார்க்க முடியுமா.? எப்படி.?

ஆன்லைன் வீடியோ உலாவுதல் மற்றும் லைவ்ஸ்ட்ரீமிங் ஆகியவைகளுக்காக உலகளவில் புகழ்பெற்ற ஒன்றாக யூட்யூப் திகழ்கிறது. பல ஆண்டுகளாக மக்கள் வீடியோக்களை அணுகுவதற்கான வழியை யூட்யூப் மாற்றிக்கொண்டே வருகிறது. எனினும், இதுவொரு ஆன்லைன் சேவை என்பதால் உங்கள் மொபைல் தரவை மிகப்பெரிய அளவில் யூட்யூப் நுகரும்.

குறிப்பாக, அது எச்டி 720-பிக்சல் தீர்மானம் கொண்ட வீடியோக்கள் என்றால் நீங்கள் தரவு மிக எளிதாக காலியாகி விடக்கூடும். ஆனால் செயலில் நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் வீடியோக்களை பார்க்க முடியும், அதற்கான ஒரு வழி இருக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்வீடியோக்களை நீங்கள் ஆப்லைனில் சேவ் செய்ய வேண்டும். அதெப்படி.?

how-watch-youtube-videos-without-internet-in-tamil

வழிமுறை #01



நீங்கள் முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் யூட்யூப்பை திறக்க வேண்டும்.

வழிமுறை #02

பின்னர் நீங்கள் சேமித்து விட்டு பின்னர் பார்க்க விரும்பும் வீடியோவை அணுகவும்

வழிமுறை #03

அந்த விடியோவின் தம்ப் அப்ஸ் ஐகான்களுடன் சேர்த்து டவுன்லோட் / சேவ் ஆகிய ஐகான்களையும் நீங்கள் பார்க்கக்கூடும்.



வழிமுறை #04

அதில் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்யவும் உங்களுக்கு ஒரு பாப் அப் கிடைக்கப்பெறும்.

வழிமுறை #05



அந்த பாப் அப்பில் நீங்கள் தேர்வு செய்த வீடியோவின் தேவையான தீர்மானம் தேர்வு செய்த பின்னர் ஓகே என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை #06

ஒருமுறை டவுன்லோட் முடிந்ததும் நீங்கள் யூட்யூப் ஹோம் சென்று மெனு கிளிக் செய்து ஆப்லைன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர் நீங்கள் ஒரு இணைய அல்லது மொபைல் இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் பதிவிறக்கம் செய்யப்பட்ட விடீயோக்களின் பட்டியலில் விருப்பமான விடியோவை பார்க்க முடியும்.

Don't Miss it.

Powered by Blogger.