Header Ads

உங்கள் ஐபோனில் பாப்-அப் நோட்டிபிகேஷனை நிறுத்துவது எப்படி?

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோனின் தேவை என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இகாமர்ஸ் இணையதளங்கள் மூலமோ அல்லது வேறு வழியிலோ ஒரு ஐபோனை வாங்கிவிட வேண்டும் என்பது அனைவரின் கனவாக உள்ளது.








ஒரு ஐபோனில் நம்முடைய அனைத்து தனிப்பட்ட ரகசியங்களையும் பதிவு செய்து வைத்து கொள்ளும் வசதி இருப்பதே பெரும்பாலானோர் அதை விரும்பி வாங்குவதற்கு காரணம்.
இந்த நிலையில் எதிர்பாராத காரணமாக உங்கள் ஐபோனை உங்கள் நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினர்களிடமோ கொடுக்க வேண்டிய நிலை வந்தால் உங்கள் தனிப்பட்ட ரகசியங்களை அவர்கள் பார்த்தால் தர்மசங்கடம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஐபோனை நான் பயன்படுத்தி கொண்டிருந்தபோது என்னுடைய பிறந்த நாளுக்காக நண்பர் ஆர்டர் செய்த பரிசுப்பொருள் வந்து கொண்டிருப்பது குறித்து ஒரு பாப்-அப் மெசேஜ் வந்தது.


இதனால் எனக்கு சேர வேண்டிய த்ரில் இல்லாமல் போனது. இதுபோன்ற அம்சங்களை தவிர்ப்பதற்காக ஐபோனை பிறரிடம் கொடுக்கும்போது நோட்டிபிகேஷனை நிறுத்திவிடலாம். அதாவது டிசேபிள் செய்துவிடலாம். அதுகுறித்து தற்போது பார்ப்போம்
நோட்டிபிகேஷனை டிஸேபிள் செய்வது எப்படி?
இது மிகவும் எளிமையானது. இரண்டு முறைகளில் உங்கள் ஐபோனுக்கு வரும் நோட்டிபிகேஷனை நிறுத்தலாம். ஒன்று ஐபோனுக்கு வரும் நோட்டிபிகேஷனை நிறுத்த பயன்படும் அசிஸ்டிவ் டச். உங்கள் ஐபோனில் இருக்கும் அசிஸ்ட்டிவ் டச் ஐ டேப் செய்ய வேண்டும்.
இதனால் நோட்ட்பிகேஷன் செண்டர் ஐகானில் சில ஷார்ட்கட் தோன்றும். அதில் ஒன்று நோட்டிபிகேசனை அனுமதிப்பது அல்லது நிறுத்துவது என்ற ஆப்சனில் நிறுத்துவதை என்பதை தேர்வு செய்துவிட்டால் உங்கள் ஐபோனுக்கு நோட்டிபிகேசன் வராது.


இன்னொரு முறை உங்கள் ஐபோனுக்கு வரும் நோட்டிபிகேசனை செட்டிங்ஸ் மூலம் நிறுத்துவது: இந்த முறையிலும் நீங்கள் உங்கள் ஐபோனுக்கு வரும் நோட்டிபிகேசனை மிக எளிதாக நிறுத்திவிடலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு வேலை தான். உடனே செட்டிங்ஸ் சென்று அதில் இருக்கும் நோட்டிபிகேசன் செல்ல வேண்டும்.
பின்னர் நோட்டிபிகேஷனில் உள்ள செலக்ட் ஆப்ஸ் என்ற ஆப்சனுக்குள் சென்று அதில் இருக்கும் நோட்டிபிகேசனை நிறுத்துதன் என்ற ஆப்சனை தேர்வு செய்து க்ளிக் செய்ய வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் மீண்டும் அனுமதிக்கும் வரை உங்களுக்கு எந்தவிதமான நோட்டிபிகேசனும் வராது.


ஒருசில குறிப்பிட்ட ஆப்களில் இருந்து வரும் நோட்டிபிகேசனை மட்டுமெ நிறுத்த வேண்டும் என்றால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது அந்த குறிப்பிட்ட ஆப்-இல் உள்ள ஆப்சனில் சென்று அதில் இருக்கும் நோட்டிபிகேசன் டிஸேபிள் என்பதை தேர்வு செய்துவிட்டால் போதும்.

Don't Miss it.

Powered by Blogger.