Header Ads

டிக்கெட் முன்பதிவினை எளிமையாக்க வாட்ஸ்அப் மற்றும் புக்மைஷோ புதிய திட்டம்

ஆன்லைன் பொழுதுபோக்கு டிக்கெட்டிங் தளமான புக்மைஷோ, வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து வியாபார ரீதியிலான சோதனை திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் செயலி அனைத்து வாடிக்கையாளர்களும் டிக்கெட் முன்பதிவை உறுதி செய்யும் அங்கமாக அமையும்.


bookmyshow-join-hands-with-whatsapp-business-pilot-programme



நிறுவனத்துடன் இணைந்துள்ள முதல் இந்திய நிறுவனமாக புக்மைஷோ இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 'எங்களது தளத்தில் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் சேவையை பயன்படுத்தி வரும் விதத்திற்கு ஏற்ப, வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைய திட்டமிட்டுள்ளோம்' என புக்மைஷோ, சேவைகளுக்கான தலைவரான ரவ்தீப் சாவ்லா தெரிவித்தார். இந்தியாவில் பெரும்பாலானோருக்கும் தகவல் பரிமாற்றத்திற்கு தலைச்சிறந்த செயலியாக வாட்ஸ்அப் உருவாகியுள்ளது. 

இதனால் இந்த செயலியை டிக்கெட் முன்பதிவிற்கு உறுதி செய்யும் வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் வாரங்களில் இந்த சேவை அனைவருக்கும் வழங்கப்படும் என சாவ்லா தெரிவித்தார். 

இதனால் புக்மைஷோ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் வாட்ஸ்அப் செயலியில் டிக்கெட் முன்பதிவினை உறுதி செய்வதற்கான தகவலை பெறுவர். இந்த தகவல் டெக்ஸ்ட் அல்லது கியூ.ஆர் கோடு மற்றும் மின்னஞ்சல் வடிவில் அனுப்பப்படும். 



சமீபத்தில் புக்மைஷோ பிளான்-இட் எனும் மெசேஜிங் சேவையை அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தை கொண்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடி டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை சிறப்பானதாக்க முடியும். இந்த அம்சம் டிக்கெட் முன்பதிவு செய்யும் விண்டோவில் வழங்கப்படுவதால் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

Don't Miss it.

Powered by Blogger.