Header Ads

எச்சரிக்கை : அடோப் பிளாஷ் ப்ளேயர் பயன்படுத்துபவரா நீங்கள்.? உஷார்.!



adobe-flash-player-vulnerabilities-being-exploited-says-company-warns-user-to-update-in-tamil




இன்டர்நெட் பயன்பாடுகளில் அடோப் பிளாஷ் ப்ளேயர், மல்டிமீடியா போன்றவற்றில் ஹேக்கர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அத்தகைய தாக்குதல்களைத் தடுக்க தங்கள் அமைப்புகளை விரைவாக நடவடிக்கைகள் எடுக்கும் என அடோப் சிஸ்டம்ஸ் இங்க் திங்களன்று தெரிவித்தது.


அடோப் பிளாஷ் ப்ளேயர், ஹேக்கர்கள் பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சைபர்-பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி லேப் இன்க் நிறுவனம் சுவிஸ், பல்கேரியா மற்றும் நெதர்லாந்தில் உள்ள சேவையகங்களுக்கு தனது புதிய மென்பொருளை அனுப்பியது.


அடோப் பிளாஷ் ப்ளேயர்:

அடோப் பிளாஷ் ப்ளேயர் வீடியோவை ஒருங்கிணைப்பதற்காக அசைவூட்டம், விளம்பரங்கள் மற்றும் பல்வேறு வலைப்பக்க பிளாஷ் கூறுகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மிக அண்மைக்காலத்தில் உயர் இணைய பயன்பாடுகளை உருவாக்கவும் பயன்படுகிறது.

மைக்ரோசாப்ட் எட்ஜ்:

கூகுள்-இன் க்ரோம் மற்றும் மைக்ரோசாப்ட் எட்ஜ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவிகளையும் அதே போல் டெஸ்க்டாப் பதிப்பையும் பாதிக்கும் சிக்கலை சரிசெய்ய பிளாஷ் பாதுகாப்பு புதுப்பிப்பை வெளியிட்டிருப்பதாக அடோப் நிறுவனம் தெரிவத்துள்ளது.


ஸ்மார்ட்போன்கள்:

அடோப் பிளாஷ் ப்ளேயர் பொறுத்தவரை சில ஸ்மார்ட்போன்களிலும் மற்றும் மின்னனு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும்
வலைப் பயன்பாடுகள், விளையாட்டுக்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற அடோப் அலுவல் பணித்தளத்துக்கான உள்ளடக்கத்தையும், ஸ்மார்ட்போன், டேப்லேட், லேப்டாப் சாதனங்களுக்கான உள்ளடக்கத்தையும் உருவாக்க அடோப் பிளாஷ் புரஃபொஷனல் மல்டிமீடியா அங்கீகரிப்பு நிரல் பயன்படுத்தப்படுகிறது.

ரஷ்யா:

ரஷ்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பல்வேறு இடங்களில் இந்த அடோப் பிளாஷ் ப்ளேயர் ஹேக்கிங் பிரச்சனையில் சிக்கியுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது

Don't Miss it.

Powered by Blogger.