Header Ads

'உங்கள் முகத்தை காட்டினால் தான் இனி பேஸ்புக் திறக்கும்'

Facebook-to-introduce-facial-recognition-for-account



சான் பிரான்சிஸ்கோ :சமூக வலைதளமான பேஸ்புக் பக்கத்தில் கணக்கை தொடங்குவதற்கு முகத்தையே அடையாள அங்கீகாரமாகவும், பாஸ்வேர்டாகவும் பயன்படுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

தற்போது பேஸ்புக் பக்கத்தில் கணக்கு தொடங்க மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் போன்றவற்றை நடைமுறையில் உள்ளது.   இதேபோல், பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு விட்டாலோ, பாஸ்வேர்டு மறந்து விட்டாலோ, அதனைத் திரும்பப் பெறுவதற்கு மின்னஞ்சல், கைபேசி எண் போன்றவற்றை அளிக்க வேண்டும்.

இந்நிலையில் பேஸ்புக்கில் கணக்கு துவங்க  முகத்தையே பாஸ்வேர்டாகவும், அடையாள உறுதிச் சான்றாகவும் பயன்படுத்தும் முறையை செயல்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்குரிய தொழில்நுட்ப பாதுகாப்புகளுடன், புதிய நடைமுறை வரும் மே மாதத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.

Don't Miss it.

Powered by Blogger.