Thursday, May 1 2025

Header Ads

இனி வாட்ஸாப்ப் பயன்படுத்த கட்டணம். புது அறிவிப்பை வெளியிட்டது வாட்ஸாப்ப் நிறுவனம்


உலகின் மிகப்பெரிய மெசேஞ் ஆப் என்ற பெருமையை பெற்றுள்ள வாட்ஸ்அப் வணிகரீதியான நடவடிக்கைகளை வாட்ஸ்அப் பிசினஸ் என்ற பெயரில் தொடங்கியுள்ளதை அறிவோம், அந்த வகையில் கட்டண சேவையாக மாற உள்ளது.

வாட்ஸ்அப் பிசினஸ்

2014 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் கட்டண சேவைக்கு மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,இந்நிறுவனத்தை ஃபேஸ்புக் அமெரிக்கா டாலர் மதிப்பில் 19 பில்லியனுக்கு கைப்பற்றியது. அதனை தொடர்ந்தும் தற்போது வரை இலவசமாக சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
வரும் மாதங்களில் வணிகரீதியான லாபத்தை பெறுவதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஃபேஸ்புக் தொடங்கியுள்ளது.
அதாவது பல்வேறு பிசினஸ் மாடல்களில் முதற்கட்டமாக சிறு நிறுவனங்கள் முதல் மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் வரை வணிகரீதியான குறுஞ்செய்தி சேவை மற்றும் வாடிக்கையாளர் சார்ந்த சேவைகளுக்கு என வணிகம் சார்ந்த வாட்ஸ்அப் பிசினஸ் என்ற பெயரில் முகநூல், டுவிட்டர் வலைதளங்களில் உள்ள பிரபலங்களுக்கு என உள்ள வெரிஃபைடு டிக் போல வணிகரீதியான சேவை பெற விரும்புபவர்களுக்கு பச்சை நிற வெரிஃபைடு குறியிட்டை வழங்க உள்ளது.
சோதனை ஓட்டம்
தற்போது முதற்கட்டமாக இந்தியாவில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ள இந்த வணிகரீதியான சேவைக்கு என மாதந்தோறும் குறிப்பிட்ட அளவிலான கட்டணத்தை நிர்ணையம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

அடுத்த சில மாதங்களில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் என பலரும் பயன்படுத்தும் வகையிலான சேவையாக இருக்கும் என்பதனால் வாடிக்கையாளர்களை மிக எளிதாக இதன் வாயிலாக அனுகலாம்.
மொபைல்களில் எவ்வாறு தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-களுக்கு டிஎன்டி சேவையை பயன்படுத்துவதனை போல வாட்ஸ்அப் கணக்குகளையும் பிளாக் செய்ய வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படலாம்.

தனி நபர்களுக்கு தொடர்ந்து இலவசமாகவே வழங்கப்படலாம் அல்லது மாற்று வழி விளம்பர முறையை செயல்படுத்தி வருமானம் பெற ஃபேஸ்புக் திட்டமிடலாம்.

Don't Miss it.

Powered by Blogger.