Header Ads

பிளாக் செய்யப்பட்ட இணையத்தளங்களை எங்கிருந்தும் பயன்படுத்துவது எப்படி?

இண்டர்நெட் உலகில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகளும் அதிகப்படியான சேவைகளை தங்களது நாடுகளில் முடக்கி வருவது அதிகரித்துள்ளது. சில இடங்களில் நெட்வொர்க் அட்மின்களும் சில தளங்களை பயன்படுத்த முடியாத அளவு முடக்கி விடுகின்றனர், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் இது அதிகமாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்கள், ஆரோக்கியம், உடல் நலம், மதம் மற்றும் அரசியல் சார்ந்த தளங்கள் அதிகளவு இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவ்வாறு பிளாக் செய்யப்பட்ட இணையத்தளங்களை பயன்படுத்துவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.



கேச்சி 

பெரும்பாலான தேடுப்பொறிகள் இன்டெக்ஸ் செய்யப்பட்ட சில இணையப்பக்கங்களின் கேச்சிக்களை பயன்படுத்தும். இணையத்தளத்திற்கு செல்லாமல், இணையப்பக்கத்தின் கேச்டு காப்பியை கூகுள் அல்லது சர்ச் ரிசல்ட்களில் இயக்க முடியும்.


டிஎன்எஸ் 

சில சமயங்களில் இண்டர்நெட் சர்வீஸ் வழங்குவோர் நீங்கள் பயன்படுத்த நினைக்கும் தளங்களை முடக்கலாம். இவ்வாறான சமயங்களில் நீங்கள் டிஎன்எஸ் சர்வெரை ரீகான்ஃபிகர் செய்ய வேண்டும். சில சமயங்களில் டிஎன்எஸ் சர்வெர்கள் சில ஐபி முகவரிகளை தீர்க்க முடியும். எனினும் டிஎன்எஸ் கொண்டு தடை செய்யப்பட்ட இடங்களில் இருந்து இயக்க வழி செய்யும்.

பிராக்சி சர்வெர்கள்

 பிராக்சி இணையத்தளங்கள் மூலம் அதிகப்படியான பிரச்சனைகள் ஏற்படும், இவை தடை செய்யப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் சர்வெர்களை தானாகவே ஓபன் செயயும். பிராக்சிக்கள் இணையத்தளங்களின் கேச்சி காப்பிக்களை சேமித்துக் கொண்டு அவற்றை வேகமாக இயக்க வழி செய்யும்.

விபிஎன் 

விபிஎன் அல்லது விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் என்பது வெளியில் இருந்து குறிப்பிட்ட நெட்வொர்க்கை பயன்படுத்த வழி செய்யும். பகிர்ந்து கொள்ளப்படும் பொது நெட்வொர்க்களையும் பிரைவேட் நெட்வொர்க்கில் பகிர்ந்து கொள்ளக் கூடியதாய் மாற்றும். இத்துடன் பிராக்சி இணையத்தளங்களை என்க்ரிப்ட் செய்து யாரும் அறிந்து கொள்ள முடியாதபடி மாற்றும்.


Nyud.net 

 தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை இயக்க அவற்றின் இணைய முகவரி (லின்க்) nyud.net என டைப் செய்தால் இயக்க முடியும்.


ஐபி மறைத்தல்

 சில சமயங்களில் ஐபி முகவரிகளில் மட்டும் இணையத்தளங்கள் பிளாக் செய்யப்படும். இவ்வாறான சமயங்களில் இலவசமாக கிடைக்கும் IP Hiding மென்பொருள்களை பயன்படுத்தலாம்.

Don't Miss it.

Powered by Blogger.